News
APRIL 2025

குரு உபதேசம் 4359
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் …
ஆயிரம் கோடி அசுரர்களை நொடியில் அழித்து பண்புள்ள மக்களை காக்கின்ற வல்லமையுடைய வல்லவன்தான் முருகப்பெருமான். ஆயிரம் தாயினும் மிக்க தாயன்புடையவன் முருகப்பெருமான், அவன் கருணைக்கடல், தயவே வடிவானவன்தான். ஆனால் பண்புள்ள மக்களுக்கு இடையூறு செய்பவர்களை கண்டால் நொடிப்பொழுது தாங்கமாட்டான், அவன் கோபம் எல்லையில்லாமல் போய்விடும்.
தற்காலம் பண்புள்ளோர் மிகுந்த கொடுமைக்கு உள்ளாகியுள்ளதால் அனைவரையும் காக்க முருகப்பெருமானே நேரில் அவதாரமாக தோன்றியுள்ளான். இனிவரும் காலமெல்லாம் இவ்வுலகம் ஞானபண்டிதனாரின் நேரடி கவனத்தில், முருகனின் ஆட்சிக்கு கீழ் வரத்தான் போகிறது. வெகு விரைவில் இந்த உலக மக்கள் முருகப்பெருமான் ஆட்சியை காணத்தான் போகிறார்கள்.
ஆதலினால் இதுவரை தவறு செய்திருக்கலாம், செய்து கொண்டும் இருக்கலாம் இனியாகினும் திருந்தி விடுங்கள், முருகப்பெருமானது ஆட்சியிலே அவர்கள் இருக்க வேண்டுமாயின் இன்றைய தினம் தொட்டே ஞானிகள் திருவடிகளைப் பற்றி மனம் உருகி பூஜைகள் செய்து தமது தவற்றினை உணர்ந்து மன்னிப்பை கேட்டுக் கொண்டால் தப்பிப்பார்கள். மன்னிக்கும் மகாதேவன் முருகனின் கருணையைப் பெற்று வளமுடன் வாழுங்கள்.
……………..
வதம் செய்வான் முருகனே வணங்காத அசுரனை
இதமுடன் போற்றிடவே இன்பம் உண்டாம்.
