News
APRIL 2025

குரு உபதேசம் 4363
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
இயற்கை சீற்றங்கள் வருவதற்கு முன்னரே தன்னையும், தன்னை சார்ந்தோரையும் காக்கின்ற ஆற்றலும், அறிவும் வரும்.
இடர் செய்கின்ற அசுரர்களாகிய முரண்பட்ட மக்களிடத்திருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதை அறியலாம்.
பிற உயிர்களுக்கு ஜீவதயவின்றி கொடுமைகள் செய்கின்றவனும், இடையூறு செய்கின்றவர்களும் அசுரர்கள் என்றும், எல்லா உயிர்களிடத்தும் அன்பும் செலுத்தி ஜீவதயவை வளர்ப்பதோடு ஞானியர் திருவடித் துணை உடையவர்கள் தேவர்கள் எனவும் அறியலாம்.
கடவுள் நம்பிக்கையும், பாவ புண்ணியத்தில் நம்பிக்கையும் உள்ளவர்கள் தேவர்கள் என்றும், கடவுள் நம்பிக்கையும் பாவ புண்ணியங்கள் இல்லை என்று வாழ்பவர்கள் அசுரர்கள் என்பதையும் அறியலாம்.
……………..
கட்டகன்ற கந்தனின் கழலிணை போற்றிட
எட்டும் இரண்டும் எளிதில் சித்தியே.
