News
JUNE 2025

குரு உபதேசம் 4439
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்….
இப்பிரபஞ்சத்தில் இன்று ஒருவன் ஒரு செயலை, அது நன்மையோ தீமையோ செய்வானாகில் அது மீண்டும் அவனுக்கே வந்து சேரும் என்பது மாற்ற முடியாத, மறுக்க முடியாத உண்மையாகும். அது சற்று முன்பின்னாகவோ அல்லது பல ஜென்மங்களிலோ அவனது ஆன்மாவைப் பற்றி கண்டிப்பாக தொடர்ந்து அதன் விளைவுகள் அவனை அடைந்தே தீரும் எனும் மாற்ற முடியாத மறுக்க முடியாத உண்மையை முருகனருளால் உணர்வார்கள்.
கடவுளின் பெயரால் ஆடு, கோழி போன்ற உயிர்களை பலியிட்டால் அந்த உயிர்பலி பாவமானது அவனை சேருவதோடு அந்த பலியும் சாந்தமே வடிவான தயவுடைக் கடவுளின் பெயரால் செய்யப்படுவதினாலே எவ்வுயிரையும் காக்கின்ற கடவுளுக்கு கோபம் உண்டாகி கடவுளின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உயிர் பலியிட்ட பாவத்திற்கும் ஆளாகி அடுத்தடுத்த ஜென்மங்களிலே உயிர்பலியிட்டவன் ஆடாகவும், கோழியாகவும் பிறப்பான். அப்படி பிறந்த அவனை, அவனால் கொலை செய்யப்பட்ட ஆடும், கோழியும் கடவுள் அருளாலே மனிதனாக பிறந்து ஒரு ஜென்மம் இல்லையேல் மறுஜென்மத்திலேனும் உறுதியாக இவனை எந்த இறைவன் முன்னிலையில் பிற உயிரை கொலை செய்தாயோ அந்த இறைவன் முன்னிலையில் பலியிடக் கூடும் என்பதை அறிந்து கொள்வான்.
ஆதலின் உயிர்பலி இடுதல் ஆகாது, பிற உயிர்களை உணவிற்காக கொல்வதே பாவம். அதிலும் கடவுளின் பெயரால் உயிர் பலியிடுதல் கொடும் பாவமும் சாபமும் ஆகும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
