News
JULY 2025

குரு உபதேசம் 4444
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
தாயினும் மேலான கருணையுடைய தனிப்பெரும் கருணைத் தெய்வம் முருகப்பெருமானே வெகுண்டு எழுந்ததினால் இவ்வுலகினை காத்து நின்ற முருகனது கருணைக்கரம் விலகிவிடுகின்ற படியினாலே மக்கள் இதுவரை செய்த பாவபுண்ணியம் இயற்கை சீற்றங்களாக மாறி, தீயன செய்தோரை கடுமையாக தாக்கத்தான் போகிறது. ஆயினும் மனம் திருந்தி இனியேனும் முருகனது திருவடி பற்றி மனமுருகி வேண்டி அவரவரும் தாம் தாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோரி முருகனை அழுது தொழுது வணங்கி மன்றாடி தாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாய் எந்த உயிர்களுக்கு இடையூறு செய்தோமோ அந்த உயிர்கள் மனம் மகிழ நடந்திடுமாறு எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி பிற உயிர் வாழ தானதருமங்களை தாராளமாய் செய்ய செய்ய, செய்கின்றவர் பாவச்சுமைகள் குறைந்து அவரெல்லாம் முருகனின் அருள் பார்வைக்கு ஆளாகி நடந்து கொண்டிருக்கின்ற இயற்கை சீற்றங்களிலிருந்து, உலகப்பேரழிவிலிருந்து, பிரளயத்திலிருந்து, முருகனது கருணைக் கரங்களால் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை அறியலாம்.
