News
OCTOBER 2025

குரு உபதேசம் 4549
முருகனை வணங்கிட:
சுத்தம், அசுத்தத்தை அறிந்து அசுத்தத்தை நீக்கி சுத்தி செய்து, சுத்த தேகத்தைப் பெற்று சதகோடி சூரிய பிரகாசமுள்ள ஒளி தேகமாக மாற்றிக் கொண்டவன் முருகனே என்றும், அவனே அருட்பெருஞ்ஜோதி வடிவினாகி நின்றனன் என்பதையும், அறிவதோடு உடல் மாசு நீங்கினாலன்றி உயிர் மாசு நீங்காது என்றும், உடல் மாசு நீங்கினால் உயிர்மாசும் நீங்கி, அறிவு தெளிவாகி செம்பொருள் அறிவாகி என்றும் அழியாத பேரின்ப நிலையான மரணமிலாப் பெருவாழ்வையும் முற்றுப்பெற்ற உண்மை ஞானத்தையும் அதுவே தரும் என்பதையும் அறியலாம்.
மாசற்ற முருகனின் மலரடி போற்றிட
ஆசற்ற வாழ்வும் அருளும் உண்டாம்.
கனி வேலன் கந்தனைப் போற்றுவோம்
பணிவான வாழ்வும் பண்பும் பெறுவோம்.
பாடுவோம் பதஞ்சலி முனிவரை
நாடுவோம் நக்கீரர் பெருமானை.
தேடுவோம் திருமூலதேவரை
கூடுவோம் கும்பமுனியை (அகத்தியர்)
