News
OCTOBER 2025
குரு உபதேசம் 4554
அகத்தீசனை வணங்கி பூஜைகள் செய்து :
உணவிலே மென்மை, உள்ளத்திலே மென்மை, செயலிலே மென்மை, சொல்லிலே மென்மை, பார்வையிலே மென்மை, நடையிலே மென்மை (பணிவுடன் நடத்தல்) என ஆறுவகையான மென்மையான பண்புகளை அறிந்து கொள்ளலாம். அந்த ஆறு வகையான மென்மைப் பண்புகளை வாழ்விலே கடைப்பிடிக்கும்படியான அறிவையும் பெறலாம். மென்மையே சைவமாகும் என்றும் உணவிலே சைவமாக, சிந்தையிலே சைவமாக, செயலிலே சைவமாக, சொல்லிலே சைவமாக, பார்வையிலே சைவமாக, நடந்து செல்வதிலே பிறர் மனம் புண்படாது நடந்து செல்கின்ற நடையிலே சைவம் என ஆறு வகையான சைவத்தையும் கடைப்பிடித்தால் மனிதன் தெய்வமாகலாம் என்கிற அதிவீர சைவநெறியைப் பற்றி உணர்ந்து கொள்ளலாம்.


