News
NOVEMBER 2025
குரு உபதேசம் 4588
முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
பாலையும் நீரையும் பிரித்தெடுக்கும் அன்னப்பட்சியைப் போல் தூலதேகத்தின் மாசை நீக்கியும் சூட்சும தேகத்தை ஒளி பெறச் செய்தும் என்றும் அழிவிலாத ஒளி உடம்பை பெறலாம் என்று அறியலாம்.
மாற்றமாம் மணிவாசகர் மலரடி போற்றவே
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.
நந்தனார் திருவடியை நாளும் போற்றவே
சிந்தையும் தெளியும் திடமாம் சித்தியே.
எந்தை வாசகன் இணையடி போற்றிட
சிந்தையும் தெளியும் திடமாம் சித்தியே.
சித்தியாம் வாசகம் தினமும் படித்திட
முக்தியும் உண்டாம் முனையும் திறந்திடும்.
முப்பாலும் கடந்த முனிவன் வாசகத்தை
தப்பாமல் கற்றிட தானவனாமே!
சுந்தர ஞானம் சொல்லும் வாசகத்தை
மந்திரமாக மதித்திடல் நலமே!
மணிவாசகப் பெருமான் மலரடி போற்றிட
அணிமா சித்தும் அருளும் உண்மையே.
முப்பாலும் கடந்த முனிவன் வாசகத்தை
தப்பில்லா கற்றிட தானவனாமே.


