News
NOVEMBER 2025
குரு உபதேசம் 4590
முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட :
சைவ உணவை கடைப்பிடிக்கவும், தூய மனதினை பெறவும், தயைசிந்தை பெற்று பெருகிடவும், பக்தி செலுத்திடவும் அருள் செய்து தவமுயற்சியினை மேற்கொள்ள செய்து முருகன் அருள் கூடிட தவத்தோன் ஆகிடலாம் என்பதை அறியலாம்.
ஒரு மனிதன் இகவாழ்வாகிய இல்லறம் சிறப்படைய சைவ உணவை கடைப்பிடித்தும், தூய மனதோடு தயைசிந்தையுடன் பக்தி செலுத்தினால்தான் இல்லறமும் சிறக்கும். இப்பண்புகளை தீவிரமாக கடைப்பிடித்தால்தான் துறவறமாகிய பரவாழ்வும் சிறக்கும்.
ஆதலினால் முருகன் அருளால்தான் ஒருவன் சைவ உணவை மேற்கொள்ளவும், தூய மனதையும், தயைசிந்தையையும், பக்தியையும் பெறவும் கடைப்பிடிக்கவும் அதன் பயனை அடையவும் முடியும் என்பதை அறிந்து முருகன் திருவடியை போற்றி வணங்கிட பெற்றிடலாம். வேறு மார்க்கம் ஏதும் இல்லை.
காருண்ய கந்தன் கடம்பனை போற்றிட
ஆரண்ய வாழ்வு அருளும் உண்மையே.
அய்யன் மணிவாசகன் அருளை போற்றிட
சைவத் தலைவன் முருகனை காணலாம்.
மழைக்கும் வெயிலிற்கும் குடை பயன்படுவது போல
நாம் பெற்ற மானுட தேகம் இகவாழ்விற்கும் பரவாழ்விற்கும் பயன்படும்.


