News
JANUARY 2026
தினம் ஒரு அகவல் 10
10. ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்
ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
ஆன்ம குழப்பமான சந்தேகங்களையும், மயக்கத்தையும் மற்றும் பசி, தாகம், பிணி, நோய், முதுமை, அச்சம் போன்ற ஐந்துவகையான உடல் துன்பங்களையும் முற்றிலும் நீக்கி பூரணத்தை அருளியவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.


