தினம் ஒரு அகவல் 12
12. ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி
ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி !
யாரிடமும் கல்வி கற்காமல், எந்த நூல்களையும் படிக்க வேண்டிய அவசியமில்லாமல் எனக்கு பேரொளியான ஞானத்தை கொடுத்து நிலைபெறச் செய்த அருட்பெருஞ்ஜோதியே !