News
JANUARY 2026
தினம் ஒரு அகவல் 14
14. திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி
திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும்ஓர்
அருள்வெளிப் பதி வளர் அருட்பெருஞ்ஜோதி !
ஒப்பற்ற சுத்த பெருவெளியான இறைவன் வியாபித்துள்ள பரவெளியே திருநிலையாகிய தனிவெளியாகும். இதுவே அழிவில்லாத நித்திய இன்பம் நிலைத்துள்ள சிவ வெளியாகும். உயிர் எழுத்துகளின் வரிசையில் கடைசியாக ஆயுத எழுத்தான “ஃ” என்பதை திருநிலை என்று ஆசான் குறிப்பிடுகிறார். அகாரமாகிய இடகலையும் உகாரமாகிய பிங்கலையும் மகாரமாகிய புருவமத்தியில் சேர்வதே திருநிலையாகும். அங்கு தான் ஓம் என்ற பிரணவம் தோன்றும். அந்த பிரணவத்தில் அருள்மயமாக ஆட்சி செய்யும் அருட்பெருஞ்ஜோதி !


