News
JANUARY 2026
தினம் ஒரு அகவல் 19
19. விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
விமல போதாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
அமல சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !
போதாந்தம் – அறிவின் எல்லை ( போதம் + அந்தம் )
விமலம் : மாசற்ற, குற்றமற்ற
மாசற்றதும், அறிவின் இறுதி நிலையானதும் ஆகிய மெய்ப்பொருளைக் கொண்ட ஞான வெளியாகவும், களங்கமற்ற ஞானசபையாகவும் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி !


