News
JANUARY 2026
தினம் ஒரு அகவல் 20
- பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
பெரிய நாதாந்தப் பெருநிலை வெளியெனும்
அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !
நாதாந்தம் : ஒலியின் முடிவு ( நாதம் + அந்தம் ) – ஓம்
சிற்றம்பலம் : சிற்சபை, ஞானசபை.
எல்லாவற்றிற்கும் ஆதாரமான ஒலியாகிய பரம்பொருளை (“ஓம்”) உணரும் நிலையே நாதாந்தமாகும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருமை பொருந்திய ஞானவெளியில், “ஓம்” என்ற ஞானசபையில் வீற்றிருக்கிறார்.


