News
JANUARY 2026
தினம் ஒரு அகவல் 21
- சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சுத்த வேதாந்தத் துரியமேல் வெளியெனும்
அத்தகு சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !
வேதாந்தம் : வேதங்களின் முடிவு ( வேதம் + அந்தம் )
துரியம் : வேதாந்தத்தின் முடிவு.
துரியம் மேல் : துரியாதீதம். அத்தகு : அந்த தகுதியுடைய
தூய வேதாந்தத்தின் உயர் நிலையான துரியத்தையும் கடந்து, துரியாதீதத்தில் விளங்கும் ஞான வெளியாகிய, அந்த மகத்தான தகுதியுடைய சிற்சபையாகவும் திகழும் அருள்மயமான பேரொளியே!


