News
MAY 2026
தினம் ஒரு அகவல் 234
எச்சநி னக்கிலை யெல்லாம் பெறுகவென்று
அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி – 234
எச்சம் நினக்கு இலை எல்லாம் பெறுக என்று
அச்சம் தவிர்த்த என் அருட்பெருஞ்ஜோதி !
எச்சம் – குறை / முன் செய்த வினைகளின் மிச்சம்
உனக்கு இனி எந்தவிதக் குறையும் (பாதிப்பும்) இல்லை; எல்லா நன்மைகளும் நிறைந்து வளரட்டும்” என்று வாழ்த்தி, என்னுடைய எல்லாவித அச்சங்களையும் நீக்கியருளிய அருட்பெருஞ்ஜோதியே!


