News
MAY 2026
10th May 2026
தினம் ஒரு அகவல் 244
யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 244
யோக சித்திகள் வகை உறு பல கோடியும்
ஆக என்று எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி !
யோகப் பயிற்சியால் அடையக்கூடிய பல கோடிக்கணக்கான சித்திகளின் வகைகளையும் நுட்பங்களையும், “அவை அனைத்தும் உனக்கு கிடைப்பதாக” என்று எனக்கு அருளிச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!


