News
MAY 2026
19th May 2026
தினம் ஒரு அகவல் 258
எட்டிரண் டென்பன வியலுமுற் படியென
அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 258
எட்டு இரண்டு என்பன இயலும் முற்படி என
அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி !
சீவனாகிய (அகாரம் – 8) உயிரையும், சிவனாகிய (உகாரம் – 2) பரமாத்மாவையும் அறிந்து கொள்வதே ஞானத்தின் முதல்படி என்று நிலையான பொருளாய் இருந்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !


