News
FEBRUARY 2026
5th February 2026
தினம் ஒரு அகவல் 28
- ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
ஏகம் அனேகம் எனப் பகர் வெளி எனும்
ஆகமச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், இந்த உலகில் நிலைத்திருக்கும் ஒரே நித்திய உண்மைப் பொருளாகவும், இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களின் ஆன்மாகவும் , சிற்சபை எனும் ஞான வெளியில் பேரொளியாக திகழ்கிறார்.


