News
MAY 2026
தினம் ஒரு அகவல் 284
சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி – 284
சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று
ஆரியர் புகழ் தரும் அருட்பெருஞ்ஜோதி !
ஆரியர் – மதிப்புமிக்கவர் / ஞானிகள்
சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் ஒளிகள் அனைத்திற்கும் மூலமான பேரொளியாக (ஜோதியுள் ஜோதி) விளங்குகின்றவன் என்று ஞானிகளாலும் புகழப்பட்ட அருட்பெருஞ்ஜோதியே!


