News
JUNE 2026
தினம் ஒரு அகவல் 286
பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்
மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி – 286
பிறிவு ஏது இனி உனைப் பிடித்தனம் உனக்கு நம்
அறிவே வடிவு எனும் அருட்பெருஞ்ஜோதி !
இனி உனக்கு நம்மிடமிருந்து எந்தப் பிரிவும் இல்லை, உன்னை நாம் முழுமையாக பற்றிக் கொண்டோம். உனக்கு இனிமேல் நம்முடைய ஞானமே (ஒளி அறிவு) வடிவமாக அமையும் என்று உறுதியளித்து அருளிச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!


