News
JUNE 2026
11th June 2026
தினம் ஒரு அகவல் 304
நன்றறி வறியா நாயினேன் றனையும்
அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி – 304
நன்று அறிவு அறியா நாயினேன் என்றனையும்
அன்று வந்து ஆண்ட அருட்பெருஞ்ஜோதி !
நன்மை எது என்று அறிந்துகொள்ளும் ஞானம் கூட இல்லாத நாயைப் போன்றவனான என்னையும் கூட, அந்நாளிலேயே தேடி வந்து ஆட்கொண்டு அருள் செய்த அருட்பெருஞ்ஜோதியே!


