News
FEBRUARY 2026
தினம் ஒரு அகவல் 31
31. சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி !
மனிதர்கள் வகுத்த அனைத்துச் சமயங்களின் எல்லைகளையும், பிரிவுகளையும் கடந்த நிலையில் இருக்கும், ஒப்பற்ற தனிப் பொருளான பரவெளியில் ஒளி வீசி நிற்கும் பேரொளியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திகழ்கிறார்.


