News
FEBRUARY 2026
9th February 2026
தினம் ஒரு அகவல் 32
32. முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்தருள்
அச்சுடராம் சபை அருட்பெருஞ்ஜோதி !
சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகிய முச்சுடர்களும் பொருந்துமாறு இயங்க உள்ள ஆதார சக்தியாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி. முச்சுடரின் இணைப்பே முக்திக்கு வழிவகுக்கும்.


