News
FEBRUARY 2026
10th February 2026
தினம் ஒரு அகவல் 33
33. துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
துரியமும் கடந்த சுக பூரணம் தரும்
அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !
ஆனந்த நிலையான துரிய நிலையை கடந்த பேரானந்த நிலையான துரியாதீத நிலையில் கிடைக்கும் நிரந்தர பூரணப் பேரின்பத்தை ஞான வெளியான சிற்சபையில் திகழும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !


