News
JUNE 2026
தினம் ஒரு அகவல் 332
விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே
அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி – 332
விருப்போடு இகலுறு வெறுப்பும் தவிர்த்தே
அருட்பேறு அளித்த அருட்பெருஞ்ஜோதி
உலகியல் பற்று (விருப்பு) மற்றும் அதனுடன் முரண்படும் வெறுப்பு ஆகிய இருவிதமான மன சலனங்களையும் நீக்கி, அருளை மட்டுமே நிரந்தரமான பெரும் பயனாக எனக்கு அளித்த அருட்பெருஞ்ஜோதியே!


