News
JUNE 2026
தினம் ஒரு அகவல் 334
அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட
அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி – 334
அருட்பேர் தரித்து உலகனைத்தும் மலர்ந்திட
அருட் சீர் அளித்த அருட்பெருஞ்ஜோதி !
அருள் என்னும் பெருமைக்குரிய பெயரைச் சூட்டி, உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்ந்து மலர்ச்சி அடையுமாறு, அருளால் உண்டான அரிய சிறப்புகளையும் எனக்கு அளித்த அருட்பெருஞ்ஜோதியே!


