News
JUNE 2026
தினம் ஒரு அகவல் 338
விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி – 338
விண்ணினுள் விண்ணாய் விண் நடு விண்ணாய்
அண்ணி நிறைந்த அருட்பெருஞ்ஜோதி !
அண்டவெளியின் உள்ளே மற்றொரு வெளியாக (ஆகாயமாக), அந்த வெளியின் மையத்திலும் (நடுவிலும்) ஜோதிச் சொரூபமாக, எங்கும் இடைவெளியின்றி நெருங்கிப் பூரணமாக நிறைந்திருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


