News
JULY 2026
தினம் ஒரு அகவல் 342
காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி – 342
காற்றினுள் காற்றாய்க் காற்று இடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி
காற்றின் உள்ளே அடங்கியிருக்கும் நுட்பமான காற்றாகவும், அந்தக் காற்றின் இடைவெளிகளிலும் சக்தியாக நிறைந்து, மிகுந்த ஆற்றலுடன் உயர்ந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


