News
JULY 2026
தினம் ஒரு அகவல் 344
காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி – 344
காற்று உறு காற்றாய்க் கால்நிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி !
காற்றின் உள்ளே நுண்ணிய சக்தியாக அமைந்த காற்றாகவும், அந்தக் காற்று நிலைப்பெற்று நிற்பதற்கான மூல ஆதாரமாகவும் விளங்கி, மிகுந்த ஆற்றலுடன் தொடர்ந்து பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!


