News
JULY 2026
தினம் ஒரு அகவல் 358
விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 358
விண்ணிலை சிவத்தின் வியன் நிலை அளவி
அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !
வியன் நிலை – பரந்த நிலை. அளவி – எல்லையுள் அடக்கி
ஆகாயத்துக்கும் அப்பால் உள்ள பரம்பொருளான சிவத்தின் உன்னதமான, பரந்த நிலையைத் தனது சர்வ வல்லமையால் அளந்து, அந்த நிலையைத் தன்னுடன் நெருக்கமாகப் பொருந்தும்படி நிலைப்பெறச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!


