News
FEBRUARY 2026
தினம் ஒரு அகவல் 37
37. சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சுட்டுதற்கு அரிதாம் சுக அதீத வெளி எனும்
அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !
எந்த வார்த்தையாலும் சுட்டிக் காட்டுவதற்கு முடியாததாய், உலக இன்பங்களைக் கடந்த பேரின்பப் பெருவெளியாக விளங்கி, எட்டுவகையான சித்திகளுக்கும் மேலானதான சிற்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


