News
FEBRUARY 2026
தினம் ஒரு அகவல் 39
39. உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய
அபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய
அபய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !
உலகில் காணப்படும் இரண்டு எதிரெதிர் நிலைகளாகத் தோன்றுபவை அனைத்தும் உண்மையில் ஒன்றே என்று உணர்த்திய, எல்லா உயிர்களுக்கும் அச்சம் நீக்கி அடைக்கலம் கொடுக்கும் ஞானசபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


