News
FEBRUARY 2026
23rd February 2026
தினம் ஒரு அகவல் 46
46. எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய
வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
எனைத்தும் துன்பு இலா இயல் அளித்து எண்ணிய
அனைத்தும் தரும் சபை அருட்பெருஞ்ஜோதி !
எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் விடுபட்ட ஒரு மேலான இயல்பான வாழ்வை வழங்கி, வேண்டிய அனைத்தையும் அருளும் சக்தி படைத்த திருச்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


