News
FEBRUARY 2026
தினம் ஒரு அகவல் 47
47. பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
ஆணிப்பொ ன்னம்பலத் தருட்பெருஞ் ஜோதி
பாணிப்பு இலதாய்ப் பரவினோர்க்கு அருள்புரி
ஆணிப் பொன்னம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !
பாணிப்பு – தாமதம்
தன்னை வணங்குவோருக்கு தாமதம் இல்லாமல் அருளாசி வழங்கக் கூடியவராக உயர்ந்த செம்பொன்னால் ஆன பொது அம்பலத்தில் (சிற்சபையில்) வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


