News
SEPTEMBER 2026
தினம் ஒரு அகவல் 472
காற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 472
காற்றினில் இடைநடு கடைநடு அகம்புறம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காற்று என்னும் பூதத்தின் எல்லா இயக்க நிலைகளிலும் (ஆரம்பம், நடு, முடிவு, மையம்) மற்றும் அகத்திலும் புறத்திலும் நிகழும் எல்லா இயக்கங்களையும் துல்லியமாகவும் அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


