News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 518
அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்
அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 518
அகப்புற நடுக்கடை அணைவால் புறமுதல்
அகப்பட வகுத்த அருட்பெருஞ்ஜோதி
ஒரு மனிதனின் உள் ( ஆன்மா ), வெளி ( உடல் ), நடு (தொடர்பு), முடிவு ( இறுதி நிலை ) ஆகிய அனைத்து நிலைகளையும் தன் அருளாலே ஒன்றிணைத்து, அதன் விளைவாக, தோற்றம் முதல் அதன் அனைத்துப் புற இயக்கங்கள் வரை எல்லாமே தன்னுள்ளே அடங்கி இயங்குமாறு அமைத்த அருட்பெருஞ்ஜோதி !


