News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 526
அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்
அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 526
அகநடு புறக்கடை அணைந்து அகப்புறமுதல்
அகம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உள்ளத்தின் நடுவில் இருந்தும், புறத்தின் எல்லையில் பொருந்தி இருந்தும், உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்திற்கும் மூலமாகி, எல்லா நிலைகளிலும் பொருந்தும்படி, ஒழுங்குறப் பிரித்து அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி !


