News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 572
குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 572
குணமுதல் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
குணம் – முக்குணங்கள் ( சாத்வீகம், தாமசம், ராட்சசம் )
முதல் கருவிகள் – மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
மனிதனின் செயல்பாட்டிற்கு ஆதாரமான முக்குணங்களும், மனம், புத்தி போன்ற அகக்கருவிகளும் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாகப் பொருந்தி, ஒருங்கிணைந்து செயல்படும் விதமாக அமைத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


