News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 59
59. தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர்
அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி
தனு கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர்
அநுபவம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி !
தனு – உடம்பு, கரணாதிகள் – அந்தக்கரணங்கள் ( மனம், புத்தி, சித்தம், அகங்காரம்)
உடல், மனம் போன்ற கருவிகள் அனைத்தையும் கடந்துச் சென்று நேரடியாக அனுபவ அறிவாகவே ஆகி விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


