News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 610
உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 610
உயிர்வகை அண்டம் உலப்பில எண்ணில
அயர்வற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
உலப்பில – அழிவற்ற அல்லது முடிவுறா அயர்வற – சோர்வில்லாத
எண்ணிக்கையற்ற வகைப்பட்ட உயிரினங்களையும், அவை வாழ்வதற்குத் தேவையான முடிவில்லாத அண்டங்களையும், எவ்விதச் சோர்வும் இன்றி மிக நேர்த்தியாக வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


