News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 63
63. என்னையும் பணிகொண் டிறவா வரமளித்
தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி
என்னையும் பணிகொண்டு இறவா வரம் அளித்து
அன்னையின் உவந்த அருட்பெருஞ்ஜோதி !
என்னையும் தன் அடிமையாக ஏற்றுக்கொண்டு, எனக்கு மரணமே இல்லாத பெருவாழ்வு என்னும் வரத்தை அளித்து, நான் அந்த இன்ப நிலையை அடைவதைக் கண்டு அன்னையின் அன்பை விடவும் அதிகமாக மகிழ்ச்சி அடைகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


