News
MARCH 2026
15th March 2026
தினம் ஒரு அகவல் 66
66. பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்
அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி
பவனத்தின் அண்டப் பரப்பின் எங்கெங்கும்
அவனுக்கு அவனாம் அருட்பெருஞ்ஜோதி !
அனைத்து உலகங்களிலும், அவற்றின் பரப்பிலும், எங்கெங்கிலும் ஒவ்வொரு உயிருக்கும், உயிராக இருந்து (எல்லாமாகவும் ஆகி) விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


