News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 69
69. எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி
எப்பாலுமாய் வெளியெல்லாம் கடந்து மேல்
அப்பாலும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி !
எல்லாத் திசைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளவரும், அண்டம் முழுவதையும் நிரப்பி நிற்கும் ஆகாய வெளி அனைத்தையும் கடந்து மேலாகவும், அந்த மேலான எல்லைக்கும்கூட அப்பாற்பட்டவராகவும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


