News
MARCH 2026
27th March 2026
தினம் ஒரு அகவல் 78
78. இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்
றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
இன்புறு சித்திகள் எல்லாம் புரிக என்று
அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி !
உண்மையான நிலைத்த இன்பத்தை அளிக்கக்கூடிய சித்திகள் (ஆற்றல்கள்) அனைத்தையும் செய்து பயன்பெறலாம் என்று, பேரன்புடன் எனக்கு அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


