News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 98
98. இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக்
கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி
இங்கு உறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு
அங்கையில் கனியாம் அருட்பெருஞ்ஜோதி !
உற – இருந்து அங்கைக்கனி – உள்ளங்கைக் கனி
இந்த உலக வாழ்க்கைச் சூழலில் அலைந்தாலும் (திரிந்தாலும்) என் மனம் ஒருபோதும் தளர்ச்சி அடையாத (இளையாத) நிலைமையைத் தந்தவரும், உள்ளங் கையில் கிடைத்த கனி போல எளிதாகவும், இனிமையாகவும் இருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


