News
FEBRUARY 2025
 
          குரு உபதேசம் 4320
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
ஆறறிவு படைத்த மனிதன் சிறப்பறிவு உடைய மனிதனாக மாறிட வேண்டுமாயின் ஜீவதயவை கடைப்பிடித்தாலன்றி இயலாது. ஜீவதயவை கடைப்பிடிக்க கடைப்பிடிக்க சிறப்பறிவு உண்டாகும்.
ஆகையினால் சிறப்பறிவு உண்டாவதற்கு ஜீவதயவே முக்கியம். ஜீவதயவை பெறுவது எப்படி? பெரும் முயற்சி ஏதும் தேவையில்லை, முருகனருளால் அதை எளிமையாக பெறலாம். மூன்றே மூன்று கொள்கை மட்டுமே. அவை
1. உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும்.
2. சிறப்பறிவை அளிக்க வல்லவரும், ஜீவதயவின் தலைவரும் ஞானத்தின் தலைவருமான அருட்பெருஞ்ஜோதி வடிவான முருகனின் திருநாமங்களை காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ ஓம் முருகா” என்றோ “ஓம் சரவணபவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ தினம் தினம் தவறாமல் நாமஜெபமாகிய பூஜை செய்திடல் வேண்டும்.
3. மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும்.
அவ்வளவே மிக எளிய முறையில் ஜீவதயவைப் பெற்று அவரவரும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
 
         
								 
								





 
															 
															