News
MAY 2025

குரு உபதேசம் 4390
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்….
சைவநெறியை கடைப்பிடித்தும், மது அருந்தாமலும் மக்கள் வரிப்பணத்தில் உணவு, உடை, மருத்துவம், வாகன வசதி, தங்கும் வசதி போன்ற ஜீவாதார அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்துவார்களே அன்றி தனக்காகவோ, தனது சந்ததிக்காகவோ, பிறருக்காகவோ, எதிர்காலத்திற்கென்றோ, தற்காலத்திற்கென்றோ பொருளை ஒருபோதும் சேமிக்கவோ இருப்பு வைத்துக் கொள்ளவோ மாட்டார்கள்.
இன்று அளித்த இறைவன் முருகப்பெருமான் நமக்கு என்றும் அருள்செய்வான் என்ற முருகனின் மீதான நம்பிக்கையில் தொண்டு செய்வதையே கடமையாய் கருதி செயல்படுகின்ற பரிபக்குவத்தை பெறலாம்.
……………..
தீர்க்கமாம் திருமூலதேவனை தரிசிக்க
பார்க்க கண்கள் பெற்ற பயனே!
தீர்க்க தரிசியாம் திருமூலதேவனை
பார்க்க கண்கள் பெற்றதன் பயனே!
அகிலம் போற்றும் ஆறுமுகப் பெருமானை
மகிழ ஆட்சிபுரிவன் மண்ணுலகம் செழிக்க.
