News
MAY 2025

குரு உபதேசம் 4393
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஒரு நொடிப் பொழுதில் அநேகம் அநேகம் கோடி சக்திகளை முருகனின் நாமங்களை அவனது திருவடி பற்றி மனமுருகி சொல்லி சொல்லி முருகனது அருளைப் பெற்றிட்டால் பெறலாம் என்பதை அறியலாம்.
……………..
எந்தை நந்தனார் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவகதி உண்டாம்.
புண்ணிய நந்தனார் பொற்பதம் போற்றிட
எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே.
திட்டமாம் நந்தனார் திருவடி போற்றிட
அட்டமா சித்தும் அருளுவன் நந்தனே.
நாட்டமாம் நந்தனை நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மனமும் செம்மையே.
செம்மையாம் நந்தனார் திருவடி போற்றிட
இம்மைக்கும் மறுமைக்கும் இணையடி துணையே.
துணையாம் இணையடி தோத்திரம் செய்திட
வினையும் இல்லை விவேகம் உண்டாம்.
உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட
கண்டவர் கண்ட கருத்து இதுவாகும்.
ஆகுமே நல்வினை அனைத்தும் சித்திக்கும்
வேகுமே வினைகள் வெந்தே வீழ்ந்திடும்.
வீழ்ந்திடும் வினைகள் வேரற்ற மரம்போல்
ஆழ்ந்து உரைத்த அருளுரையாமே.
வேதாந்த வித்தகன் விமலனாம் முருகனின்
பாதார விந்தம் பணிதலே பண்பாகும்.
