News
MAY 2025

குரு உபதேசம் 4411
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
அசுரர்களை வதம் செய்து வென்று நல்லோரை அன்று காத்த முருகப்பெருமான் பக்தர்களின் வேண்டுகோளிற்கு இணங்கி, நல்லோர் படும் துன்பம் கண்டு இரங்கி, பண்புள்ளோரை துன்புறுத்தும் அசுரர்களை அடக்கி, இவ்வுலகினிலே மனிதர்கள் ஆட்சியை முடித்து ஞானிகள் தலைமையில் ஞானஆட்சியை ஏற்படுத்துவான் என்பதையும், முருகனது ஞானஆட்சியிலே கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசியும், கலப்படமில்லாத உணவுப்பொருளும், லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகமும், குற்றங்கள் குறைந்தும், குற்றம் செய்யவே அச்சப்படும்படியான நீதிநிர்வாகமும், கொலை கொள்ளையற்ற தூய சமுதாயம் உண்டாகி எங்கும் அமைதியும், இன்பமும், அன்பும் தவழுகின்ற அற்புதமான சொர்க்கத்தை விட உயர்வான ஒரு மேம்பட்ட உலகினை அனைவரும் காணலாம் என்பதையும், பொருள் பற்றற்ற தன்னலமற்ற, சேவை மனப்பான்மையுடன் கூடிய உயர் பண்புகளை கொண்ட முருகனின் அடியவர்களால் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாத ஜீவதயவுடையவர்களால், முருகன் திருவடியை பற்றி பின்செல்லும் பக்தர்களால் அற்புதமான ஒரு நெறிக்குட்பட்ட ஆட்சி முறை நடக்கும் என்பதையும், அந்த ஜீவதயவுடைய ஆட்சியிலே நல்லோர் நலமுடன் வாழ்வதும் தீமை புரிவோர் ஞானிகளால் கட்டுப்படுத்தப்படும் நல்லாட்சி நடந்திடும் என்பதையும் அறியலாம்.
……………..
பாடுபெறும் முருகபிரான் பதத்தை போற்றிட
வீடுபேறு உண்டாம் விரைந்தே.
பயன்மிக்க முருகபிரான் பதத்தை போற்றிட
நயமிக்க வாழ்வு நண்ணும் முக்தியே.
