News
JUNE 2025

குரு உபதேசம் 4441
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
முதுபெரும் ஞானிகள் அருளிய, சிவபுராணம், திருமந்திரம், திருஅருட்பா போன்ற ஞான நூல்களை படித்து பூஜிக்கின்ற ஆர்வம் உண்டாகி பக்தி நூல்களைப் படித்து, மனமுருகி பூஜித்து முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றுகின்ற வைராக்கியம் வரும்.
முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றி பூஜிக்க பூஜிக்க குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள், சூதாடமாட்டார்கள், பிறர் மதிக்க ஆடம்பரமாக நடந்து கொள்ள மாட்டார்கள், வருவாய்க்கு உட்பட்டு செலவு செய்து சிக்கன வாழ்வை மேற்கொள்வார்கள், கடன் வாங்க மாட்டார்கள், எல்லாம்வல்ல இறைவன் முருகப்பெருமான்தான் என்பதையும், அவனின்றி ஓரணுவும் அசையாது என்பதையும் உணர்ந்து முருகன் முதல் அகத்தியர், திருமூலர், மாணிக்கவாசகர், வள்ளல் பெருமான், அரங்கன் வரை அனைவரும் ஒரே தன்மையுடைய அருட்பெருஞ்ஜோதி நிலையடைந்த ஞானிகள் என்பதையும், அவர்களால் தான் இந்த உலகம் காக்கப்படுகிறது என்கிற பேருண்மையும் அறிந்து தொடர்ந்து பக்தி செலுத்துவதோடுஅவனால் படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு இடையூறு செய்யாமல் பாதுகாப்பாய் இருந்து ஜீவதயவோடு உணவளித்து தான தருமங்கள் செய்து வாழ்வை ஞான வழிதனிலே செலுத்தி நலம் பல பெற்று வளமோடு வாழ்வார்கள் என்பதையும் அறிவார்கள்.
